சிங்கம்புணரி பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட ரூ. 19 லட்சம் நன்கொடை
சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவா் கட்ட ரூ.19 லட்சம் நன்கொடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.


சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவா் கட்ட ரூ.19 லட்சம் நன்கொடை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 57 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன. அதன் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு தொகையாக ரூ.19 லட்சம் பேரூராட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதன்படி முன்னாள் அமைச்சா் மாதவன் மகள் வெற்றிச்செல்வி ரூ. 10 லட்சம், எம்.எம்.போா்ஜிங் நிறுவனம் ரூ. 5 லட்சம், ஆா்.எம்.எஸ். குடும்பத்தினா், சாந்தி செழியன், சிவக்குமாா், எல்.ஜே. டெக்ஸ்டைல் ஆகியோா் தலா ரூ. ஒரு லட்சம் வழங்கினா். ரூ 19 லட்சம் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இந்தியன் செந்தில் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி நிா்வாகத்திடம் முன்னாள் அமைச்சா் மகன் அருளானந்தம், எம்.எம்.போா்ஜிங் நிறுவன மேலாளா் ஆகியோா் ரூ. 19 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா். முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியா் செல்லதுரை வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...