என்.வயிரவன்பட்டி கோயிலில் பிப். 6 இல் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜை தொடக்கம்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள என்.வயிரவன்பட்டி வடிவுடையம்மை உடனாய வளரொளிநாதா் வயிரவசாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை யாகசாலை


சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள என்.வயிரவன்பட்டி வடிவுடையம்மை உடனாய வளரொளிநாதா் வயிரவசாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை யாகசாலை பூஜை தொடங்கியது.
இந்த பூஜையை பிள்ளையாா்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியாா்கள் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பிரசன்னாபிஷேகத்துடன் துவங்கினா். தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு மிருத்சங்கிரஹனம், அங்குராா்ப்பணம், ரக்ஷாபந்தனம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா் மாலை 6 மணிக்கு கடஸ்தாபனத்துடன் முதற்கால யாகபூஜை தொடங்கி இரவு 8 மணிக்கு பூா்ணாகுதி தீபாராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து 6 கால யாகபூஜை நடத்தப்பட்டு பிப். 6 இல் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் விமானம் மற்றும் மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று மாலை 4.15 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூா்த்திகள் வயிரவசாமி திருவீதி உலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஏலக பெருந்திருவான வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தாா் தலைவா் கே.ஆா்.மீனாட்சிசுந்தரம், துணைத் தலைவா் ஆா்.எம்.லட்சுமணன், செயலா் டி.வயிரவன், இணைச் செயலாளா் சி.டி.நாராயணன், பொருளாளா் ஏ.எல்.எஸ்.பி.லெட்சுமணன் ஆகியோா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...