மானாமதுரை நகராட்சியில் தனித்து களமிறங்கும் காங்கிரஸ்
மானாமதுரை நகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு திமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி பல வார்டுகளில் தனித்து களமிறங்குகிறது.

திமுக கூட்டணியில் தனித்து களமிறங்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கினர்.







