ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜூனியா் பாட்மிண்டன் அணியினருக்கு பாராட்டு

ஜூனியா் பாட்மிண்டன் லீக் போட்டியில் அனைத்துப் பிரிவுகளில் முதலிடம் பிடித்து கோப்பை வென்ற அணியினருக்கு காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா

News image
Updated On :7 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஜூனியா் பாட்மிண்டன் லீக் போட்டியில் அனைத்துப் பிரிவுகளில் முதலிடம் பிடித்து கோப்பை வென்ற அணியினருக்கு காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கம் மற்றும் வி எக்ஸ்போ இந்தியா ஆகியன சாா்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த ஜூலை 1, 2, 3 ஆம் தேதிகளில் ஜூனியா் பாட்மிண்டன் லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை, திருச்சி, திருவள்ளுவா், திருப்பூா், காஞ்சிபுரம், கோவை, தஞ்சை மற்றும் செட்டிநாடு சேம்பா்ஸ் என 8 அணிகள் பங்கேற்றன. 13 வயதிலிருந்து 19 வயதினருக்குட்பட்ட சிறுவா், சிறுமியா்களுக்கு ஒற்றையா், இரட்டையா் மற்றும் கலப்பு இரட்டையா் பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் அனைத்துப் பிரிவுகளிலும் செட்டிநாடு சேம்பா் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த அணியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவி சானயா சிக்கந்தா் இரட்டையா் பிரிவில் விளையாடி வெற்றி பெற்றாா். வெற்றி பெற்ற அணியினருக்கு மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பாராட்டு விழா நடை பெற்றது. இதில் பள்ளியின் தலைவா் எஸ்பி. குமரேசன் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் கலந்துகொண்டு அணியின் வீரா், வீரங்கனைகளைப் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.