மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி 13-வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக நகரச் செயலாளர் நஜிமுதீன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது இளையான்குடி பேரூராட்சி தலைவர் வேட்பாளராக திமுகவில் அக்கட்சியின் நகரச் செயலாளர் நஜூமுதீன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இவர் தான் போட்டியிட்ட 17-வது வார்டில் அதிமுக வேட்பாளர் மீராவிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த செய்யது ஜெசிமா தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் இளையான்குடி 13-வது வார்டு திமுக உறுப்பினர் மிர்சா ராஜினாமா செய்ததையடுத்து இந்த வார்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் தேர்தலில் பிரதீப் அசோக்குமார் வெற்றி
இந்த தேர்தலில் 13-வது வார்டுக்கு திமுக வேட்பாளராக அக்கட்சியின் நகரச் செயலாளர் நஜூமுதீன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் தாஜ்மைதீன் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் இவர் சுயேட்சையாக களமிறங்கினார். மேலும் தேர்தல் களத்தில் மொத்தம் 5 பேர் போட்டியிட்டனர்.
கடந்த 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பதிவான வாக்குகள் இளையான்குடியில் புதன்கிழமை எண்ணப்பட்டன. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கட்சியின் நகரச் செயலாளர் நஜூமுதீன் 451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட தாஜ்மைதீன் 190 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றார்.
தேர்தலில் வென்ற நஜூமுதீனுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். இவருக்கு இளையான்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப.மதியரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
நீட் தேர்வெழுதுவோரில் 35% பேர் வெறும் 3 மாநிலங்களைச் சேர்ந்தோர்! அதிர்ச்சி தரும் தரவுகள்!

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



