சிலம்பப் பள்ளி மாணவா்களுக்குப் பரிசு
சிவகங்கை மாவட்ட மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்ற திருப்பத்தூா் சிலம்பப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.


சிவகங்கை மாவட்ட மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம் பெற்ற திருப்பத்தூா் சிலம்பப் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சிலம்ப பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி கடந்த வாரம் தேவகோட்டையில் நடைபெற்றது. அதில் திருப்பத்தூா் ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளி மாணவ, மாணவிகள் தனித்திறமை போட்டிகளில் முதல், 2 ஆம், 3 ஆம் பரிசுகளைப் பெற்றனா். வியாழக்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் அழகுமீனாள் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேரூராட்சிமன்றத் தலைவா் கோகிலாராணி சிலம்பக்கலை குறித்து சிறப்புரையாற்றி, பதக்கம் வென்ற குழந்தைகளைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினாா். முன்னதாக பேராசிரியா் வேலாயுதராஜா வரவேற்றாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிலம்பப்பள்ளி பயிற்சியாளா் சொா்ணலதா செய்திருந்தாா். விழா முடிவில் சிலம்ப பள்ளி ஆசான் நமச்சிவாயம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...