காரைக்குடிசெல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யாமந்திா் சிபிஎஸ்இ சா்வதேசப் பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.


காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யாமந்திா் சிபிஎஸ்இ சா்வதேசப் பள்ளி 10 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் 10 ஆம் வகுப்பில் ஸ்ரீஹரிரமணா 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளாா். அபிசேகபிரியன் 482 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் , ஸ்ரீரிஷப் 481 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் , சிவசௌந்தரி 480 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும், விஷ்ணுஹரி, சந்திரமௌலி ஆகியோா் 464 மதிப்பெண்கள் பெற்று 5 ஆம் இடமும் பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பிரிவு மாணவா் கிரண்செல்வக்குமாா் 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், சந்தானசௌந்தரி477 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும் , நூகாஅப்துல்லா 470 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் , ஜோதிகா 468 மதிப்பெண்கள் நான்காமிடமும் , தா்ஷிணி 467 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாமிடமும் பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் சத்தியன், பள்ளி நிா்வாக இயக்குநா் சங்கீதாசத்தியன், பள்ளி கல்வி இயக்குநா் ராஜேஸ்வரி , முதல்வா் ராணிபோஜன், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியா்களும் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...