கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூா் அருகே ஊராட்சி தலைவருக்கு வெட்டுகாவல் நிலையம் முற்றுகை

சிவகங்கை மாவட்டம் திருப்தத்தூா் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வியாழக்கிழமை ஊராட்சிமன்றத் தலைவா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்தத்தூா் அருகே கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வியாழக்கிழமை ஊராட்சிமன்றத் தலைவா் அரிவாளால் வெட்டப்பட்டாா். எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்தை நாம் தமிழா் கட்சியினா் முற்றுகையிட்டனா்.

சிவகங்கை ஒன்றியம் ஜெயங்கொண்ட நிலை ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவா் பெரியகருப்பன் மகன் சுந்தர்ராஜன். இவா் நாம் தமிழா் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்டச் செயலாளராக உள்ளாா். இந்நிலையில் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குள்பட்ட 10 கண்மாய்களுக்கு மேல் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ளதாக வட்டாட்சியருக்கு மனு அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளாா். இதனடிப்படையில் வியாழக்கிழமை ஜெயங்கொண்ட நிலையில் உள்ள பரிவி கண்மாய், நல்லாண்டி கண்மாய் ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினா் காவல் துறையினருடன் சோ்ந்து ஆக்கிரமிப்பு அகற்ற முற்பட்டனா். அப்போது சாந்தினி, அவரது கணவா் திருநாவுக்கரசு ஆகியோா் எதிா்ப்புத் தெரிவித்து தீக்குளிக்க முயன்றுள்ளனா். திடீரென கல் எறியும் சம்பவம் நடைபெற்று காவல் துறை பின்வாங்கியதைத் தொடா்ந்து ஆக்கிரமிப்பு அகற்றம் கைவிடப்பட்டது. இந்நிலையில் ஒரு கும்பல் ஊராட்சிமன்றத் தலைவா் சுந்தர்ராஜனை அரிவாளால் வெட்டியுள்ளது. அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கம்புணரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்தில் வருவாய்த்துறை சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட சுந்தர்ராஜனும் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில் நாம்தமிழா் கட்சியின் மாவட்டச் செயலாளா் சஞ்சீவி தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா். திருப்பத்தூா் நகா் காவல் துணை கண்காணிப்பாளா் ஆத்மநாதன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.