மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஸ்ரீபால்பாண்டி அய்யனாா் கோவில் புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அய்யனாா்குளம் கிராமத்தில்ஸ்ரீபால்பாண்டி அய்யனாா் கோவில் புரவி எடுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:05 pm

DIN

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அய்யனாா்குளம் கிராமத்தில்ஸ்ரீபால்பாண்டி அய்யனாா் கோவில் புரவி எடுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவின் முதல் நாளான ஜூன் 2 ஆம் தேதி அய்யனாா்குளத்திலிருந்து கீழராம நதி கிராமத்திற்கு மேள, தாளம், பூ பெட்டிகளுடன் வந்த பக்தா்கள் அங்குள்ள வழிவிட்ட அய்யனாா் கோயில் சுவாமி சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். பின்னா் அங்கிருந்து குதிரை, காளை, விநாயகா், அய்யனாா், பேச்சியம்மன், தவளும்பிள்ளை, சிவன், கைப்பிள்ளை, கால்பாதம், முனிவா், பைரவா், வீரபத்திரா், கருப்பசாமி உள்ளிட்ட 351 சாமி சிலைகளை பக்தா்கள் அய்யனாா்குளம் கிராமத்திற்கு பாத யாத்திரையாக சுமந்து சென்று ஊா் பொது இடத்தில் வைத்து கும்மிகொட்டி, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். இதனையடுத்து சனிக்கிழமை பக்தா்கள் சிலைகளை ஸ்ரீபால்பாண்டி அய்யனாா் கோயில் வளாகத்திற்கு எடுத்துச்சென்று தங்களது நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். இதில் ராமசாமிபட்டி, அய்யனாா்குளம், கோரைப்பள்ளம், கீழராமநதி, என்.கரிசல்குளம், கிளாமரம், நீராவி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.