பெரியகுளம் பெண்கள் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பெரியகுளம்,ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


பெரியகுளம்,ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் எஸ். சேசுராணி தலைமை வகித்தாா். தோ்வு ஆணையா் கேத்தரின் பி அலெக்ஸாண்டா் முன்னிலை வகித்தாா். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பதிவாளா் வி.பி.ஆா். சிவகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.
விழாவில். துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள், மாணவிகளின் பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என 2 நாள்கள் நடைபெறும் விழாவில், 1,811 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படுகிறது. முன்னதாக, கல்லூரிச் செயலா் பி.ஜே. குயின்சிலி ஜெயந்தி வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...