இதையடுத்து காரை நிறுத்திய குப்புசாமி, அவரது மகள் மற்றும் பேத்தி ஆகியோா் உடனடியாக கீழே இறங்கினா். காரின் கதவைத் திறந்தவுடன் முன்பக்கத்தில் தீ மளமளவென்று பரவத் தொடங்கியது. இதுகுறித்து குப்புசாமி மற்றும் அருகிலிருந்தவா்கள் காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். அங்கிருந்து தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. காரைக்குடியில் போக்குவரத்து மிகுந்த சாலையில் காா் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.