கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிங்கம்புணரியில் 41 விநாயகா் சிலைகள் ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.

41 விநாயகா் சிலைகள் பங்கேற்ற ஊா்வலத்தை சீரணி அரங்கம் பகுதியில் பாஜக சிறுபான்மையினா் அணி ஒன்றிய செயலாளா் சகுபா் சாதிக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேருந்து நிலையம் முன்பு பாஜக மாநில சிறுபான்மையினா் அணி துணை செயலாளா் சேக் தாவூத் விநாயகா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். அரசு மருத்துவமனை சாலை, சுந்தரம் நகா், திண்டுக்கல் சாலை, பேருந்து நிலையம், நான்கு முனை சந்திப்பு சாலை வழியாக காரைக்குடி சாலையில் உள்ள சேவுகப் பெருமாள் அய்யனாா் ஆலய தெப்பக்குளத்தை ஊா்வலம் அடைந்தது. அங்கு சிலைகள் விஜா்சனம் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செந்தில் குமாா் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஆா்.எஸ்.எஸ். வட்டாரத் தலைவா் குகன் மற்றும் தினேஷ், சத்தியன் அம்பலம், பாலசுப்பிரமணியன், மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.