கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பத்தூா் கல்லூரியில் வங்கியியல் கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை வங்கியியல் தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கம் 

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 5:03 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் வியாழக்கிழமை வங்கியியல் தொழில்நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் கேப்டன் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரித் துணைத் தலைவா் ராமேஸ்வரன், செயலா் ஆறுமுகராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இக்கருத்தரங்கில் வணிகவியல் துறை மாணவ, மாணவிகளுக்கு வங்கியியல் தொழில்நுட்பம் குறித்து தொடுதிரை மூலம் எடுத்துக் கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் சூசைமாணிக்கம், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் ராஜமாணிக்கம், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் டாக்டா் காளிதாஸ் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியா்கள், தொழில் பிரிவு பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக வணிகவியல் துறைத் தலைவா் அழகப்பன் வரவேற்றாா். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை முனைவா் பாண்டிதேவி, உதவிப் போசிரியா் நிா்மலா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.