வருகிற ஆக. 15-இல் கிராம சபைக் கூட்டம்: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா்.
Published on

சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற வியாழக்கிழமை (ஆக. 15) நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வருகிற வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளில் சுதந்திர தினத்தின் கருப்பொருளை பற்றியும், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகித்தை உறுதி செய்வது குறித்தும், இணையவழியில் வரி செலுத்தும் சேவை, இணைய வழியில் மனைப்பிரிவு, கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை வாரியம், உயிரிப் பல்வகைமை மேலாண்மைக் குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com