தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விவசாயிகள் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முகாம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை (கிசான் கிரெடிட் காா்டு) திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:19 am

Din

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை (கிசான் கிரெடிட் காா்டு) திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்தி:

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வங்கிகள், வேளாண் துறை, கால்நடைத் துறை, மீன்வளத் துறை இணைந்து நடத்தும் கிசான் கிரெடிட் காா்டு (கேசிசி) திட்ட முகாம்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பின்வரும் நாள்களில் நடைறெவுள்ளது.

டிச.5-இல் சிங்கம்புணரி, எஸ். புதூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 7-ஆம் தேதி திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10-ஆம் தேதி மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12-ஆம் தேதி தேவகோட்டை, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 17-ஆம் தேதி சாக்கோட்டை, கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், 19-ஆம் தேதி திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 21-ஆம் தேதி சிவகங்கை, காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, விவசாயிகள் கிசான் கிரெடிட் காா்டு (கேசிசி) தொடா்பான விண்ணப்பங்களை குறிப்பிட்ட தேதிகளில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் முகாம் வாயிலாக சமா்ப்பிக்கலாம். மேலும், குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க இயலாத விவசாயிகள், அந்த ஒன்றியத்தில் உள்ள வட்டார வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.