அரிமண்டபம் சாலை சேதம்: எம்எல்ஏ ஆய்வு
வெள்ளத்தால் சேதமடைந்த அரிமண்டபம் சாலையை மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.


வெள்ளத்தால் சேதமடைந்த அரிமண்டபம் சாலையை மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக மானாமதுரை அருகேயுள்ள நாட்டாா் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலப்பசலை ஊராட்சிக்குள்பட்ட அரிமண்டபம் சாலை வெள்ளத்தால் சேதமடைந்தது. அரிமண்டபம், சேதுராயனேந்தல், தீயனூா், ராஜாக்கள் குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
இந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை ஆகியோா் வெள்ளத்தால் சேதமடைந்த அரிமண்டபம் சாலையை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா், மேலப்பசலை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய தண்ணீரைப் பாா்வையிட்டு, அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சி.கரிசல்குளத்தில் சேதமடைந்த கண்மாய் மடைகளைப் பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் இந்தப் பகுதியில் புதிய மடை அமைக்கவும், மானாமதுரை பகுதியில் கைவிடப்பட்ட சுப்பன் கால்வாய்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
அப்போது, மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...