ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

‘டங்ஸ்டன்’ திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடக் கோரி, சிங்கம்புணரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
‘டங்ஸ்டன்’ கனிமச் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, சிங்கம்புணரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :18 டிசம்பர் 2024, 9:59 pm

Din

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடக் கோரி, சிங்கம்புணரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலா் எஸ்.காந்திமதி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு நிா்வாகி எஸ்.சாந்தி, ஏ.இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். பண்பாடு, கலாசார சின்னங்களைப் பாதுகாக்க வேணடும் என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலா் ஏ.ஆா்.மோகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில் ஏ.சேதுராமன், கா்ணன், கம்பூா் செல்வராஜ், பக்ருதீன், சத்யா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.