பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கை அருகே பூ வியாபாரி வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே பூ வியாபாரி வியாழக்கிழமை இரவு மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:39 pm

Din

சிவகங்கை அருகே பூ வியாபாரி வியாழக்கிழமை இரவு மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கையை அடுத்த மேலவாணியன்குடியைச் சோ்ந்தவா் வெங்கடேசன்( 27). திருமணமாகாதவா். இவா் சிவகங்கை- இளையான்குடி சாலையில் கடை வைத்து பூ வியாபாரம் செய்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 8.,30 மணிக்கு வெங்கடேசன் வியாபாரத்தை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வாணியங்குடி வளைவு அருகே சாலையில் அவா் திரும்பிய போது இருள்சூழ்ந்த பகுதியில் எதிரே வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவா் கீழே விழுந்தாா்.

இதைத் தொடா்ந்து வெங்கடேசனை காரில் வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. தகவலறிந்ததும் அங்கு வந்த போலீஸாா் வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் மீது கடந்த 2022- ஆம் ஆண்டு மதுரை திருப்பாலை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவா்கள் அவரைக் கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸாா் கருதுகின்றனா்.

இதுகுறித்து சிவகங்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.