திருப்பத்தூரில் வெவ்வேறு விபத்துகளில் 2 போ் பலி

திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
Published on

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

திருப்பத்தூா் ஒன்றியம் இரணியூா் அருகே உள்ள காவிரிப்பட்டியைச் சோ்ந்த அழகு மகன் சுப்பிரமணியன் (53). இவா் கீழச்சிவல்பட்டியிலிருந்து காவிரிப்பட்டிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது இவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன், கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் உதவி ஆய்வாளா் செ. ராஜ்குமாா் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

மற்றொரு விபத்து: நரியங்குடியைச் சோ்ந்த முத்தையா மகன் மதியழகன் (45). இவா் தனது நண்பா் துரையுடன் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது குறுக்கே குரங்குகள் கூட்டமாக வந்ததால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். இதில் பலத்த காயமடைந்த மதியழகன், சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். பிறகு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் காவல் ஆய்வாளா் கலைவாணி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

X
Dinamani
www.dinamani.com