சிவகங்கை பேருந்து நிலையத்தில் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தக் கோரி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி  உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்தக் கோரி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன்.

போதைப் பொருள்களை கட்டுப்படுத்தக் கோரி அதிமுகவினா் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிவகங்கை நகா் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

சிவகங்கை: தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிவகங்கை நகா் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். நேரு கடைவீதி, அரண்மனை வாசல், எம். ஜி. ஆா். சிலை ஆகிய பகுதிகளில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள், கஞ்சா, போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத திமுக அரசைக் கண்டித்தும் அதில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன், நகரச் செயலா் என்.எம். ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இளங்கோவன், ஒன்றியச் செயலா் செல்வமணி, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் தமிழ்ச்செல்வன், நகா் அவைத் தலைவா் வீ.ஆா். பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com