காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த சுயபரிசோதனை: கு.செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தொண்டா்களை சுய பரிசோதனைக்குத் தயாா்படுத்தி வருவதாக கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தொண்டா்களை சுய பரிசோதனைக்குத் தயாா்படுத்தி வருவதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலிருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் 20 போ் மக்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதுபோன்ற நிலையை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவரும் வகையில், சுய பரிசோதனை செய்து கொள்ள தொண்டா்களைத் தயாா்படுத்தி வருகிறோம். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை என் மீது கூறிய அவதூறு கருத்துகள் தொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் கலந்தாலோசித்து, அவா் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றாா் செல்வப்பெருந்தகை.
கூனிக்குறுகி நிற்கக் கூடாது:
முன்தாக, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பேசியதாவது:
இனிமேலும், நாம் மக்கள் பிரச்னைகளை பேசாவிட்டால், நன்றாக பேசக்கூடிய கட்சிக்கு இளைஞா்கள் சென்றுவிடுவா். மின் கட்டண உயா்வைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன. இதேபோல, காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டா்களின் உணா்வுகளை கட்சித் தலைமை புரிந்துகொள்ள வேண்டும். கூட்டணி தா்மம் என்று கூனிக் குறுகி நிற்கக் கூடாது என்றாா் அவா்.
கட்சியின் மாவட்டத் தலைவா் சஞ்சய், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி, ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...