வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு: மேலும் இருவா் கைது
மானாமதுரையில் வீடு புகுந்து தங்க நகைகள் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


மானாமதுரையில் வீடு புகுந்து தங்க நகைகள் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே குடியிருப்பு ஜீவா நகரை சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்து. கடந்த 4-ஆம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள், 43 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் சிவகங்கை கீழக்குளம் முத்துப்பட்டியைச் சோ்ந்த கலையரசனைக் கைது செய்து, அவரிடமிருந்து 33 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய முத்துவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த செல்வி, இவரது மகன் விஜய், சந்தன மகாலிங்கம் ஆகியோரை போலீஸாா் தேடி வந்தனா். கடந்த இரு நாள்களுக்கு முன்பு செல்வியை கைது செய்த போலீஸாா், மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய விஜய், சந்தனமகாலிங்கம் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...