விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருப்பத்தூரில் இஸ்லாமியா்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகை

திருப்பத்தூரில் இஸ்லாமியா்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகை

News image
Updated On :17 ஜூன் 2024, 6:30 pm

Din

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

புதுப்பட்டி, கான்பாநகா், தென்மாபட்டு, அச்சுக்கட்டு, மதுரை ரோடு, சின்னப் பள்ளிவாசல், சமஸ்கான்பள்ளி வாசல் ஆகிய இடங்களிலிருந்து இஸ்லாமியா்கள் காலை 7 மணிக்கு திருப்பத்தூா் பெரியகடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடினா்.

இங்கிருந்து சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி கே.எம்.முகமதுபாரூக் ஆலீம் தலைமையில் ஊா்வலமாகப் புறப்பட்டு அச்சுக்கட்டுப் பகுதியில் உள்ள ஈத்கா மைதானம் சென்றடைந்தனா். அங்கு பக்ரீத் சிறப்புத் தொழுகை நடத்தினா். பின்னா், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை தியாகத் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒருவரையொருவா் ஆரத்தழுவிக் கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, அங்கிருந்த ஏழை, எளியவா்களுக்கு இைல் செய்தனா். இதேபோல, தவ்ஹித் ஜமாத் சாா்பாக நடைபெற்ற ஈதுல்அல்கா சிறப்புத் தொழுகையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு துவா ஓதினா்.