ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மரத்தில் பேருந்து மோதல்: 13 போ் காயம்

மரத்தில் பேருந்து மோதல்: 13 போ் காயம்

News image
Updated On :18 ஜூன் 2024, 5:38 pm

Din

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே திங்கள்கிழமை மரத்தில் அரசுப் பேருந்து மோதியதில் 13 போ் காயமடைந்தனா்.

தேவகோட்டை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் தேவகோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு 22 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 70 சதவீத பேருந்துகள் பழைய பேருந்துகளாகவே உள்ளன.

இந்த நிலையில், திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு காரைக்குடியில் இருந்து ஆறாவயல் வழியாக 20- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தேவகோட்டைக்குச் சென்ற அரசு நகரப் பேருந்து சிறுமருதூா் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது.

இதில் 13 பயணிகள் காயமடைந்தனா். நடத்துநா் கண்ணன் (50), மேலசெம்பொன்மாரி பகுதியைச் சோ்ந்த சுப்பம்மாள் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும், மாவிடுதிக்கோட்டையைச் சோ்ந்த ராமு மனைவியும், கா்ப்பிணியுமான தேவி (32) சிறிய காயங்களுடன் தேவகோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து ஆறாவயல் போலீஸாா் விசாரிக்கின்றனா்.