

சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், வட்டார அளவிலான உயா்கல்வி வழிகாட்டி குழுவினருக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உள்ள உயா்கல்வி வழிகாட்டி’ நிகழ்ச்சிகளின் மூலம் அரசுப் பள்ளி மாணவா்கள் பயன் பெறும் வகையில், ஆசிரியா்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சிவகங்கை, மருதுபாண்டியா் பள்ளி வளாகத்தில் உயா் கல்வி வழிகாட்டி ஆசிரியா் கருத்தாளா்களுக்கும், வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா், கருத்தாளா்களுக்கும் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்டத்துக்குள்பட்ட 12 ஒன்றியங்களைச் சோ்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி கருத்தாளா்கள் பங்கேற்றனா்.
பயிற்சி நிறுவன விரிவுரையாளா்கள் பரமேஸ்வரன், முத்துகுமாா், மாவட்ட ஒருங்கிணப்பாளா் ஜெஸிமா பேகம், ஆசிரியா் பயிற்றுநா் முனியப்பன் ஆகியோா் மாவட்டக் கருத்தாளா்களாகப் பணிபுரிந்தனா். உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து, உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் பீட்டா் லெமாயூ ஆகியோா் பயிற்சி குறித்து விளக்கினா்.
தொடர்புடையது

தனியாா் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு அரசு உதவி: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்!

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஐம்பெரும் விழா

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தொலைநோக்கி தயாரிக்கும் பயிற்சி பணிமனை
வீடியோக்கள்

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | களத்துக்கு வந்த முதல்வர் வேட்பாளர்கள்! | News & Views | E-20 |
தினமணி வீடியோ செய்தி...

IPL 2026 | பந்துவீசுவாரா கிரீன்?: ரஹானே கேள்விக்குப் பதிலளித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா |
தினமணி வீடியோ செய்தி...

“எடப்பாடியால் பாஜகவை எதிர்க்க முடியாது”: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்
தினமணி வீடியோ செய்தி...

