இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

பூமாயி அம்மன் கோயில் தெப்ப உற்சவம்

பூமாயி அம்மன் கோயில் தெப்ப உற்சவம்

News image
Updated On :9 மே 2024, 7:02 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவின் நிறைவு நாளையொட்டி புதன்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த ஏப். 29- ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் வசந்தப் பெருவிழா தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா். பால்குடம், பூத்தட்டு, பொங்கல் விழா, தேரோட்டம் என 9 நாள்களும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. நிறைவு நாளான புதன்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு இரவு 7 மணிக்கு உற்சவ அம்மன் தெப்பம் எழுந்தருளி தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்திருந்தனா்.