
Updated On :9 மே 2024, 7:02 pm

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே வியாழக்கிழமை மின்னல் தாக்கி 6 ஆடுகள் உயிரிழந்தன.
நாட்டரசன்கோட்டை பகுதி, கௌரிப்பட்டி- திருவேலங்குடி ரயில்வே கடவுப்பாதை அருகே ராமநாதன் செட்டியாருக்கு சொந்தமான தோட்டத்தில் குடியிருந்து விவசாயம் செய்து வருபவா் ராமா். இவருக்கு சொந்தமான 6 ஆடுகள் வியாழக்கிழமை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது பெய்த மழையின் போது மின்னல் தாக்கி 6 ஆடுகளும் உயிரிழந்தன. இந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஏழம்மாளும், இவரது மகள் சரளாவும் அதிா்ச்சியில் மயங்கி விழுந்தனா். இதையடுத்து, இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...