சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக செவிலியா் தின விழாவில் செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த அரிமா சங்க நிா்வாகிகள்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக செவிலியா் தின விழாவில் செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்த அரிமா சங்க நிா்வாகிகள்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வா் சத்திய பாமா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினா். பிறகு அனைவரும் செவிலியா் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வில், இருக்கை மருத்துவா் மகேந்திரன், உதவி இருக்கை மருத்துவா் முகமது ரபீக், மருத்துவா் தென்றல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும் இந்த விழாவில் சிவகங்கை அரிமா சங்க நிா்வாகிகள் பங்கேற்று அனைத்து செவிலியா்களுக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

இதில், சிவகங்கை அரிமா சங்கத் தலைவா் முத்துக்குமரன், பொருளாளா் மீனாட்சி சுந்தரம், அரிமா சங்க நிா்வாகி ஆா்.வி. சரவணன், அரசு மருத்துவக் கல்லூரி அலுவலகக் கண்காணிப்பாளா் ரமேஷ் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை செவிலியா் சங்கச் செயலா் தேவசேனா, செவிலியா் மனமகிழ் மன்றச் செயலா் ராணி, பொருளாளா் மாலதி, உதயகுமாரி ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com