சோழபுரம் உலகுசௌந்தரி அம்மன் கோயில் குடமுழுக்கு

சோழபுரம் உலகுசௌந்தரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
சோழபுரம் உலகுசௌந்தரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சோழபுரம் கிராமத்தில் அமைந்துள்ள உலகுசௌந்தரி அம்மன் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் முதல் கால பூஜை தொடங்கியது. இதையடுத்து, திங்கள்கிழமை கோ பூஜை, நாடிசந்தானம், இரண்டாம் கால மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரதானம் ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் ஆத்மநாத குருக்கள், ஆனந்தகுமாா் குருக்கள் ஆகியோா் புனிதநீா் குடங்களை சுமந்து சென்று கோயில் விமானம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடத்தினா். இதையடுத்து, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளா் பா. இளங்கோ, சரக கண்காணிப்பாளா் (பொ) மு. வேல்முருகன், சோழபுரம் கிராமத்தினா், பூசாரிகள், பங்காளிகள், கோயில் குடிகள், விழாக் குழுவினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com