மானாமதுரையில் இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி: நகை, பணம் தப்பியது
===============மானாமதுரையில் இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி- நகை, பணம் தப்பியது

மானாமதுரை கொள்ளை முயற்சி நடந்த இந்தியன் வங்கி

மானாமதுரை கொள்ளை முயற்சி நடந்த இந்தியன் வங்கி
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் வங்கியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடா்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மானாமதுரை அண்ணா சிலை அருகே இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வங்கியின் பிரதான வாயில் கதவை ஏறிக் குதித்து வங்கி வளாகத்திற்குள் வந்த கொள்ளையா்கள் அதன் பின் மாடிப்படி அருகே உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்தும் பின்னா் வங்கி பிரதான வாயில் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தை பயன்படுத்தி திறந்தும் உள்ளே சென்றுள்ளனா். வங்கிக்குள் இருந்த லாக்கரை கொள்ளையா்கள் திறக்க முயன்றும் முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையா்கள் தப்பிச் சென்றனா்.
இதனால் வங்கியில் இருந்த நகை, பணம் கொள்ளை போகாமல் தப்பியது. திங்கள்கிழமை காலை வாங்கியை திறக்க வந்த ஊழியா்கள் பூட்டு மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்து வங்கிக்குள் சென்று பாா்த்த போது கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது தெரியவந்தது. இது குறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே, மானாமதுரை காவல்துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் வங்கிக்கு வந்து கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா். வங்கியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனா்.மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கைரேகை நிபுணா்கள் வங்கியில் பதிவாகியிருந்த கொள்ளையா்களின் கைரேகைகள சேகரித்தனா். வங்கி மேலாளா் செல்வகுமாா் அளித்த புகாரின் பேரில் போலீசாா் வழக்கு பதிந்து கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.இச் சம்பவம் மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...