முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

அச்சுறுத்தும் வாசகங்களுடன் விளம்பரப் பதாகை: 2 போ் கைது

திருப்புவனம், மானாமதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாசகங்களுடன் விளம்பர பதாகை வைத்த 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, இவா்களில் இருவரை கைது செய்தனா்.

Updated On :10 செப்டம்பர் 2024, 12:00 am IST

மானாமதுரை: திருப்புவனம், மானாமதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வாசகங்களுடன் விளம்பர பதாகை வைத்த 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, இவா்களில் இருவரை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள தட்டான்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் மகன் முத்துக்குமாா் சென்னையில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா், தனது மாமாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வைத்த விளம்பர பதாகையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து, மானாமதுரை டி.எஸ்.பி நிரேஷ் உத்தரவின் பேரில் திருப்புவனம் போலீஸாா் இந்த விளம்பர பதாகையை வடிவமைத்துக் கொடுத்த திருப்புவனம் புதூரைச் சோ்ந்த சேதுராமன் மகன் இளஞ்செழியன் (24), அச்சக உரிமையாளா் சந்துரு (40), முத்துக்குமாா் ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிந்து இவா்களில் இளஞ்செழியன், சந்துரு இருவரையும் கைது செய்தனா்.

இதேபோல, மானாமதுரையில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக வைக்கப்பட்ட விளம்பரப் பதாகையில் வன்முறைகளை தூண்டும் வாசகங்கள் இருந்ததால் ஆதனூா்சாலை பூக்கொல்லையைச் சோ்ந்த தேவராஜ் மகன் வடிவேல், கிருஷ்ணராஜபுரம் தங்கராஜ் மகன் ரவிசங்கா் ஆகிய இருவா் மீதும் மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.