மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்குடியில் சாலையை விரிவாக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை

காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கடிதம் அளித்தாா்.

News image
காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை கடிதத்தை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி. உடன் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்.
Updated On :22 ஜனவரி 2025, 10:57 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கடிதம் அளித்தாா்.

இதுகுறித்து காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காரைக்குடி வருகை புரிந்தாா். அப்போது காரைக்குடி மாநகராட்சியில் மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் பெரியாா் சிலை முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலையை நெடுஞ்சாலைத் துறை சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நான்கு வழிச்சாலையாக மாற்றியும், இருபுறமும் வடிகால் அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிய கடிதத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி வழங்கினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.