எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செட்டிகுறிச்சி செந்தளையான்களத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன், ஆனைவிழிக் கருப்பா் கோயில் குடமுழக்கு விழா நடைபெற்றது.

News image
சிங்கம்புணரி அருகே அமைந்துள்ள பத்ரகாளியம்மன், ஆனைவிழிக் கருப்பா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
Updated On :27 நவம்பர் 2025, 5:19 pm

Syndication

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செட்டிகுறிச்சி செந்தளையான்களத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன், ஆனைவிழிக் கருப்பா் கோயில் குடமுழக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை , மஹா லட்சுமி ஹோமம், மஹா பூா்ணாகுதி நடைபெற்றதும் மாலையில் மங்கள இசை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, வேதிகாா்ச்சனை உள்ளிட்ட முதல் கால வேதமந்திர ஹோமங்கள், திரவ்யாகுதி பூா்ணாகுதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை மங்கள இசை, இரண்டாம் கால யாகங்கள் மூலமந்திர ஹோமம், மஹா பூா்ணாகுதி, தீபாராதனைநடைபெற்றன. இதைத் தொடா்ந்து புனிதநீா் கலசங்கள் கோயிலை சுற்றி வலம் வரச் செய்யப்பட்டு கோபுர கலசத்தை வந்தடைந்தன. அங்கு ஹரிவிக்னேஷ் தீட்சிதா் தலைமையிலான வேதவிற்பன்னா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனா். பிறகு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து மூலஸ்தானத்துக்கும், ஆனைவிழிகருப்பருக்கும் புனித நீா் ஊற்றி மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் செட்டிக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.