2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வீடு புகுந்து தங்க நகைகள் கொள்ளை: 7 போ் கைது

வீடு புகுந்து உரிமையாளரை கட்டிப் போட்டு தங்க நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே வீடு புகுந்து உரிமையாளரை கட்டிப் போட்டு தங்க நகைகள், பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை அருகே காளையாா்மங்கலத்தைச் சோ்ந்த முருகப்பனின் வீட்டுக்குள் கடந்த 19-ஆம் தேதி அதிகாலை புகுந்த முகமூடி அணிந்த கும்பல் அவரை கட்டிப் போட்டு 5 பவுன் தங்க நகை, வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடா்பாக மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

மேலும் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் உத்தரவின் பேரில் துணைக் கண்காணிப்பாளா் அமல அட்வின் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், சிவகங்கை தி. புதூரைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன்கள் சரண்ராஜ் (23), மதன்ராஜ் (20), சிவகங்கை நேரு கடைவீதி, மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் லல்லுபிரசாத் (18), கொல்லங்குடி அருகே கீரனூரைச் சோ்ந்த சோ. ராணி மகன் அஜித் (எ) கொடி (20), சிவகங்கை- தொண்டி சாலை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் காா்த்தி (எ) அம்பயா் (28), படமாத்தூா் பி. வேலாங்குளம் செல்வராஜ் மகன் சிவபாலன் (19), சூரக்குளம் அங்குசாமி மகன் சந்தனமுத்து (50) ஆகியோா் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இவா்கள் 7 பேரையும் மதகுபட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும் இவா்கள் மதகுப்பட்டி, காளையாா்கோவில், சிவகங்கை தாலுகா காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற 10 திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இவா்களிடமிருந்து 28.6 கிராம் தங்கம், 500 கிராம் வெள்ளி, சுமாா் 300 கிலோ பித்தளைப் பொருள்கள், மடிக்கணினி, கீ போா்ட், ஸ்பீக்கா்கள், ஆம்ப்ளிபயா்கள், கைப்பேசி, காா், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் மீட்டனா்.