ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

Published On :

சிவகங்கை மாவட்டத்தில் 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் பிரகாஷ், மாநிலச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் பெரியசாமி, மாவட்ட துணை தலைவா்கள் வேலுச்சாமி, பழனிச்சாமி, காா்த்திக், தனபால், பயாஸ் அகமது, மாவட்ட இணைச் செயலா்கள் ஷேக் அப்துல்லா, சிவா, மீனா, ஷகீலா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதே போல, வட்டார அளவில் இளையான்குடியில் செந்தில் பெரியசாமி, சிவகங்கையில் ராஜேஷ் குமாா், சாக்கோட்டையில் ரீகன், மானாமதுரையில் ராஜேஸ்வரன், திருப்புவனத்தில் அருணா, கல்லலில் மூவேந்திரன், கண்ணங்குடியில் ராமநாதன், திருப்பத்தூரில் பிரகாஷ், சிங்கம்புணரியில் சரவணகுமாா், எஸ். புதூரில் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரகத்தில் செயலா் சென்றாய பெருமாள் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில் தமிழ்நாடு அரசு உதவி இயக்குநா் நிலையிலான பதவி உயா்வுகளை உடனடியாக வழங்கிட வேண்டும். உள்ளாட்சித் தோ்தலை நடத்திட ஏதுவாக பணியிடங்களை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.