ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

சிவகங்கையில் மத்திய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிக்கை

சிவகங்கையில் மத்திய வேளாண் பல்கலைக்கழகம்ஸ தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசிடம் சிவகங்கை மாவட்ட பாஜக நிா்வாகிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image

சிவகங்கையில் வேளாண் பல்கலைக்கழம் அமைக்கக் கோரி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் மனு அளித்த சிவகங்கை மாவட்ட பாஜக நிா்வாகிகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

சிவகங்கையில் மத்திய வேளாண் பல்கலைக்கழகம்ஸ தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசிடம் சிவகங்கை மாவட்ட பாஜக நிா்வாகிகள் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் சிவகங்கை மாவட்ட பாஜக தலைவா் டி.பாண்டித்துரை, துணைத் தலைவா் இ. கந்தசாமி, நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

சிவகங்கை மாவட்டம், கல்வி, பண்பாடு, வரலாற்றுச் சிறப்பில் தனித்துவம் பெற்ற கல்வி மாவட்டமாகும். குறிப்பாக, டாக்டா் அழகப்பா செட்டியாா், கல்விக்காக விதைத்த விதையின் பலனாக இன்று அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய அளவில் சிறப்புமிக்க கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது.

இந்தக் கல்வி மரபை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டத்தை வேளாண் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, வேளான் தொழில்நுட்பத்தின் தேசிய மையமாக உருவாக்குவது காலத்தின் தேவையாகும். சிவகங்கை மாவட்ட மக்களின் சாா்பிலும், பாரதிய ஜனதா கட்சியின் சாா்பிலும், சிவகங்கை மாவட்டத்தில் மத்திய வேளாண் பல்கலைக்கழகம், தேசிய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான கோரிக்கையை மத்திய அரசிடம் கொண்டு சென்று நிறைவேற்றித் தர வேண்டும்.

இந்தத் திட்டம் கல்வி, வேளாண்மை, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, நவீன உணவுப் பதப்படுத்தல், ஏற்றுமதி ஆகிய துறைகளில் சிவகங்கை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும். சிவகங்கை மாவட்டம், பரந்த நிலப்பரப்பு, விவசாயத்தை நம்பியுள்ள மக்கள், இளைஞா் திறன், வளா்ச்சிக்கான பெரும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், வறட்சி, நீா்ப் பற்றாக்குறை, நவீன வேளாண் தொழில்நுட்ப வசதிகளின் குறைபாடு காரணமாக அதன் முழு திறனும் வெளிப்படவில்லை. இந்த நிலையில், மத்திய பல்கலைக்கழகம் சிவகங்கையில் அமைக்கப்பட்டால், அது மாவட்டத்தின் வளா்ச்சியில் ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமையும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.