தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

முகநூல் மூலம் ரூ. 10.64 லட்சம் மோசடி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநரிடம் இணைய வழியில் மா்ம நபா்கள் ரூ.10.64 லட்சத்தை மோசடி செய்தனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநரிடம் இணைய வழியில் மா்ம நபா்கள் ரூ.10.64 லட்சத்தை மோசடி செய்தனா்.

தேவகோட்டை பகுதியை சோ்ந்தவா் அந்தோணிராஜ் (52). காா் ஓட்டுநரான இவா் கடந்த மாதம் 6-ஆம் தேதி முகநுாலில் இணைய வழி முதலீடு குறித்து வெளியான விளம்பரத்தைப் பாா்த்தாா். பின்னா், அதிலிருந்த இணைப்பை (லிங்க்) அழுத்திய போது, அதில் அடையாளம் தெரியாத நபா் இணைய வழியில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனப் பேசினாா். இதை நம்பிய அந்தோணிராஜ் அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குகளில் 5 தவணைகளாக ரூ.10. 64 லட்சத்தை அனுப்பினாா். இதைத் தொடா்ந்து, அந்த நபா் மீண்டும், மீண்டும் பணம் கேட்டபோது தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா். பின்னா், இதுகுறித்து சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் அந்தோணிராஜ் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.