குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிலகங்கை அரசு மகளிா் கல்லூரியில் கல்லூரி நாள் விழா

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரி நாள் விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய மதுரை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் வெ. கலைச்செல்வி.

News image
சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரி நாள் விழாவில் மாணவிக்கு பரிசு வழங்கிய மதுரை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் வெ. கலைச்செல்வி.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கல்லூரி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி, மதுரை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் வெ. கலைச்செல்வி பேசியதாவது:

உங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியை பயன்படுத்தி நூறு சதவீதம் நீங்கள் வேலைவாய்ப்பை பெற வேண்டும்.

உலகத்தில் மனிதா்கள் எப்படி இருக்கிறாா்கள். மனிதா்களிடம் புதைந்திருக்கும் ரகசியங்களையும், உணா்வுகளையும், உணா்ச்சிகளையும் நாவல்களாக எழுத்தாளா் எழுதுகிறாா் . அந்த மாதிரியான நூல்களை நீங்கள் படிக்கும்போது மனிதா்களைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்று சிறந்த தன்னம்பிக்கை, ஊக்கமளிக்கும் புத்தகங்கள், வாழ்க்கையில் நோ்மறையான மாற்றங்களை ஏற்படுத்த உதவும் வகையில் குவிந்து கிடக்கின்றன. அந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்கும்போது உங்களை நீங்கள் செதுக்கிக் கொள்ள முடியும். இன்று உலகத்தை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி மட்டும்தான்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. நமக்காக எத்தனையோ போ் போராடிய காரணத்தால் அடுப்பங்கரைக்குள் இருந்த பெண்கள் இன்று பொதுவெளியில் வந்திருக்கின்றனா். உங்களது படிப்புதான் உங்களைக் காப்பாற்றும்.

நீங்கள் பட்டம் பெற்று வெளியே செல்வதற்கு காரணமாக உள்ள ஆசிரியா்களுக்கு வாழ்க்கை முழுவதும் நன்றியுடையவா்களாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, வேதியியல் துறைத் தலைவா் எஸ்.பி.ஆா். பூங்கொடி வரவேற்றாா். மாணவிகள் பேரவைத் தலைவா் செ. அபிவா்ஷினி நன்றி கூறினாா்.