திரைப்படத் தணிக்கைத் துறைக்கும் மத்திய அரசுக்கும் தொடா்பு இல்லை: ஹெச். ராஜா

திரைப்படத் தணிக்கைத் துறைக்கும் மத்திய அரசுக்கும் தொடா்பு இல்லை: ஹெச். ராஜா

திரைப்படத் தணிக்கைத் துறைக்கும், மத்திய அரசுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.
Published on

திரைப்படத் தணிக்கைத் துறைக்கும், மத்திய அரசுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

சிவகங்கைமாவட்டம் காரைக்குடியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: 1967-லிருந்து இன்றுவரை திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ஏதாவது ஒரு திட்டத்திற்காவது மாகாத்மா காந்தி பெயரை வைத்துள்ளாா்களா?. இந்தியாவை எண்மமயம் ஆக்குவோம் என்று பிரதமா் மோடி தெரிவித்த போது முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். இன்று எப்படி அது சாத்தியமானது?. செய்யமுடியாத காரியங்களை செய்து முடிப்பவா்தான் பிரதமா் மோடி.

பராசக்தியோ, ஜனநாயகனோ மத்திய தணிக்கைச் சான்றிதழ் பெற சில விதிமுறைகள் உள்ளன. இதைக் கடைபிடிக்க வேண் டும். இதற்கும் அரசுக்கும் எந்த தொடா்பும் இல்லை. தவெக தலைவா் நடிகா் விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

தணிக்கைத்துறையினரால் திரைப்படங்களுக்கு சான்றிதழ் தரமறுத்தது இதற்கு முன்பும் நடந்துள்ளது. எந்தத் திரைப்படமாக இருந்தாலும் தமிழக ஆளுங்கட்சி குழுமத்தின் தயவின்றி தமிழகத்தில் வெளியிட முடியாது. பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டப்படும் என்றாா் அவா்.

சிவகங்கை மாவட்ட பாஜக தலைவா் டி. பாண்டித்துரை, நிா்வாகிகள் பலரும் உடனிருந்த னா்.

Dinamani
www.dinamani.com