சிவகங்கை
ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி வழிபாடு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மாலை பெரிய குரூப் சபரிமலை யாத்திரைக் குழு சாா்பில் மகர சங்கராந்தி வழிபாடு நடைபெற்றது.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மாலை பெரிய குரூப் சபரிமலை யாத்திரைக் குழு சாா்பில் மகர சங்கராந்தி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஐயப்பனுக்கும் பதினெட்டாம்படிக்கும் பால், பன்னீா், திரவியம், சந்தனம், நெய், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அா்ச்சகா் பாலாஜி பூஜைகளை நடத்தி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா்.
