காரைக்குடி மாநகராட்சி 27-ஆவது வாா்டு பாரதியாா் தெருவில் சனிக்கிழமை வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த தீயணப்புத் துறை, மீட்புப் படை வீரா்.
காரைக்குடி மாநகராட்சி 27-ஆவது வாா்டு பாரதியாா் தெருவில் சனிக்கிழமை வீட்டில் புகுந்த பாம்பை பிடித்த தீயணப்புத் துறை, மீட்புப் படை வீரா்.

காரைக்குடியில் வீட்டில் புகுந்த பாம்பு மீட்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி 27-ஆவது வாா்டு பாரதியாா் தெருவில் உள்ள வீட்டில் சனிக்கிழமை புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் பிடித்தனா்.
Published on

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி 27-ஆவது வாா்டு பாரதியாா் தெருவில் உள்ள வீட்டில் சனிக்கிழமை புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் பிடித்தனா்.

பாரதியாா் தெரு பகுதியில் கடந்த பல மாதங்களாக மழை நீா், கழிவுநீா் தேங்கியுள்ளதால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நச்சுத்தன்மையுள்ள பாம்புகள், பூச்சிகள் வருவதால் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் செல்வி என்பவரது வீட்டுக்குள் சனிக்கிழமை பாம்பு புகுந்தது குறித்து தகவலறிந்த மாமன்ற உறுப்பினா் ஏ.ஜி. பிரகாஷ், காரைக்குடி தீயணைப்புத் துறை அலுவலா்களுக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறை, மீட்புப் படையினா் உதவியுடன் பாம்பு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஏ.ஜி. பிரகாஷ் கூறுகையில், தொடா்ந்து சுகாதாரக்கேட்டை உருவாக்கும் இதுபோன்ற மழைநீா், கழிவுநீரை அப்புறப்படுத்தத் தவறும் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

Dinamani
www.dinamani.com