சிவகங்கை
இலங்கை தமிழருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இலங்கை தமிழரை வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை தமிழரை வெட்டியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மானாமதுரை அருகேயுள்ள மூங்கில் ஊரணியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா் ஜெயேந்திரன் (48). இவா் வீட்டிலிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவா் இவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினா்.
பின்னா், அங்கு நின்ற இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த ஜெயேந்திரன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச் சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.
