முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

அரசு அலுவலா்கள் கிரிக்கெட் போட்டி

சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில், புதன்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

News image

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) விஜயகுமாா்.

Updated On :9 ஜூலை 2026, 5:37 am IST

சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில், புதன்கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ரமேஷ்குமாா், நோ்முக உதவியாளா் (பொது) விஜயகுமாா் ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் இரா. மாரி, மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாநிலச் செயலா் பாண்டி, மாவட்டச் செயலா் நடராஜன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சங்க உறுப்பினா்களைக் கொண்ட மூன்று அணிகள் பங்கேற்று விளையாடினா். இதில் ஸ்பாட்டன்ஸ் அணி முதலிடம் பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.