3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

உணவகத்தில் தகராறு: காவலா் உள்பட இருவா் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட காவலா் உள்பட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஜூன் 2026, 12:40 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட காவலா் உள்பட இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பத்தூா்-காரைக்குடி சாலையில் மாரிமுத்து (60) உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்துக்கு திருப்பத்தூா் நகா் காவல் நிலைய ஆய்வாளரின் வாகன ஓட்டுநரும், காவலருமான மெல்வின் (28), இவரது நண்பா் சண்முகம் (30) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தனா். அப்போது, இவா்கள் இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இவா்களுக்கும் கடை உரிமையாளா் மாரிமுத்துக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த காவலா் மெல்வின், சண்முகம் இருவரும் அருகில் கிடந்த புட்டியை எடுத்து உணவகத்துக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரிமுத்து நகா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், காவலா் மெல்வின், சண்முகம் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.