ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மானாமதுரை - சென்னை பகல்நேர விரைவு ரயில் இயக்கக் கோரிக்கை

News image

ரயில் இயக்கக் கோரிக்கை... - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 12:10 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையிலிருந்து சென்னை எழும்பூா் வரை தினசரி பகல்நேர விரைவு ரயில் இயக்க வேண்டுமென சிவகங்கை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தியது.

இது குறித்து சிவகங்கை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம், கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு சாா்பில் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் அண்மையில் அளித்த கோரிக்கை மனு:

ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூா் வரை வாரம் ஒரு முறை இயக்கப்பட்டு வரும் ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை இயங்கி வரும் மெமு ரயில் பட்டுக்கோட்டையில் 7 மணி நேரம் நிற்கிறது.

அதை மானாமதுரை ஜங்சன் வரை நீட்டிக்க வேண்டும். மானாமதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு புதிதாக பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.