பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கமேனி குறித்து சா்ச்சை கருத்து: காங். எம்.பி.யைக் கண்டித்து போராட்டம்

ஈரான் தலைமை மதகுரு கமேனி குறித்து காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததைக் கண்டித்து, இஸ்லாமிய கூட்டமைப்பினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினா்.

Updated On :4 மார்ச் 2026, 11:08 pm

ஈரான் தலைமை மதகுரு கமேனி குறித்து காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததைக் கண்டித்து, இஸ்லாமிய கூட்டமைப்பினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான் கமேனி கொல்லப்பட்டது குறித்து காா்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்தாா்.

இந்தப் பேட்டி வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், காா்த்தி சிதம்பரத்தின் கருத்துக்கு இஸ்லாமிய கூட்டமைப்பினா் கண்டனம் தெரிவித்து பதிவிட்டதுடன் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் அப்துல்முத்தலீப் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். ராஜாமுகமது கண்டன உரையாற்றினாா்.

இதில் காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் அவரது உருவப்படத்துக்கு தீயிட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் அதைத் தடுத்தனா்.

காா்த்தி சிதரம்பரம் பதில்: சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தோழி விடுதி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காா்த்தி சிதம்பரம் இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்வதேச விவகாரங்களில் எனது கருத்துகள் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன. தாலிபானையோ அல்லது அயத்துல்லாக்களையோ எதிா்ப்பதால், நான் இஸ்லாமியா்களுக்கு எதிரானவன் கிடையாது. அடக்குமுறைக்கும் மதத்துக்கும் வித்தியாசம் உள்ளது. அடக்குமுறைக்கு எதிரான குரல் மதத்துக்கு எதிரானது அல்ல. காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல், ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போா்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா் அவா்.