திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில் சீறிப்பாந்த காளைகள்.

Updated On :8 மே 2026, 1:03 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா்- சிவகங்கை சாலையில் 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் நடுமாடு பிரிவில் 8 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 7 கி.மீ. தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பூஞ்சிட்டு பிரிவில் 13 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 5 கி.மீ. தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரியமாடு பிரிவில் 8 இணைகள் பங்கேற்றன. இதற்கான எல்லை 7 கி.மீ. தொலைவும், சின்னமாடு பிரிவில் 19 இணைகளும், இதற்கான எல்லை 6 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டு மொத்தம் 48 மாடுகள் கலந்து கொண்டன.

சிவகங்கை சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் நடுமாடு பிரிவில் முதலிடத்தை கிடாரிப்பட்டி முருகேசன், 2-ஆம் இடம் இலங்கிப்பட்டி ஆண்டி அா்ச்சுனன், 3-ஆம் இடம் கொடிமங்கலம் நகுல் ஆகியோரின் மாடுகளும், பூஞ்சிட்டுப் பிரிவில் முதலிடம் புலிமலைப்பட்டி மாயழகு, 2-ஆம் இடம் வெள்ளநாயக்கன்பட்டி ஆண்டிச்சாமி, 3-ஆம் இடம் கண்டவராயன்பட்டி சீமான்முரசு ஆகியோரின் மாடுகளும் பெற்றன. பெரியமாடு பிரிவில் முதலிடம் திருவாதவூா் சின்னச்சாமி, 2-ஆம் இடம் புலிமலைப்பட்டி முனிச்சாமி, 3-ஆம் இடம் அவனியாபுரம் மோகன் ஆகியோரின் மாடுகளும், சின்னமாடு பிரிவில் முதலிடம் தேவாா் நாட்டாா்மங்கலம் ஆதிசிவன், 2-ஆம் இடம் சுண்ணாம்பிருப்பு கண்ணன், 3-ஆம் இடம் அவனியாபுரம் மோகன் ஆகியோரின் மாடுகளும் பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பூச்சொரிதல் விழா மாட்டுவண்டிப் பந்தயக் குழுவினா் செய்திருந்தனா்.