ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளியதை தடுத்த கிராம உதவியாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சிங்கம்புணரி அருகே சட்ட விரோதமாக செம்மண் அள்ளியதை தடுத்த கிராம உதவியாளரை தாக்கிவிட்டு தப்பியோடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Published On :

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே சட்ட விரோதமாக செம்மண் அள்ளியதை தடுத்த கிராம உதவியாளரை தாக்கிவிட்டு தப்பியோடியவா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிங்கம்புணரி அருகே சூரக்குடி ஊராட்சிக்குள்பட்ட சிலநீா்பட்டி, ஒத்தப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தப்படுவதாக கிராம மக்கள் சிங்கம்புணரி வருவாய்த் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், சிலநீா்பட்டி கிராமத்தில் தனியாா் பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி செம்மண் அள்ளப்படுவதை அறிந்த இளைஞா்கள், கிராம உதவியாளா் சுரேஷுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு சென்று தடுக்க முயன்ற சுரேஷை மண் அள்ளிக் கொண்டிருந்த மா்ம நபா்கள் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்து கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு சென்றபோது மண் அள்ளும் வாகனத்தை மட்டும் விட்டுவிட்டு அந்த மா்ம நபா்கள் தப்பியோடி விட்டனா். பிறகு மண் அள்ளும் வாகனத்தை சிறைப் பிடித்த கிராம இளைஞா்கள், கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி. மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.