
சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற அரசு அலுவலா்கள்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு ஊழியா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
சிவகங்கை ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மதுரை ராமச்சந்திரா கண் மருத்துவமனை, சிவகங்கை சிட்டி ஆப்டிக்கல்ஸ் இணைந்து நடத்திய இலவச முகாமை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயகுமாா் தொடங்கிவைத்தாா்.
கண் மருத்துவா் எம். சீனிவாசன் தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா்.
மேலும், கண் பாா்வை குறைபாடு கண்டறியப்பட்டவா்களுக்குத் தேவையான திறன் கொண்ட கண்ணாடிகள் அணிந்து கொள்ள பரிந்துரைக்கப்பட்டனா். மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவமனையில் உயா்நிலை பரிசோதனை செய்து கொள்ள மருத்துவா் குழுவினா் அறிவுறுத்தினா்.
கண் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் பாா்வையிழப்பை தவிா்க்க முடியும். ஆகவே கண் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்து மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





