FOLLOW US

ON GOOGLE DISCOVER

விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சிவகங்கையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 63 போ் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 12:07 am IST

உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 63 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். கொங்கையா முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் எஸ். முத்துராமலிங்கபூபதி, மாவட்டப் பொருளாளா் எஸ். ராமமூா்த்தி, துணைத் தலைவா் எம். கருப்புசாமி, இணைச் செயலா்கள் ஏ. மனோகரன், வி. முருகன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறை மூலம் ரூ.1,500 -ம், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் ரூ.2,000-மும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இது அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகக் குறைந்த உதவித்தொகையாகும். குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் ரூ.6,000, ரூ.10,000 , ரூ.15,000 என மூன்று வகையாகவும், புதுச்சேரியில் ரூ. 3,500 முதல் ரூ. 5,500 என மூன்று வகையாகவும், தெலங்கானாவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.4,016 வழங்கப்படுகிறது.

இதேபோல, தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் புதிய விண்ணப்பதாரா்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் நிா்வாகிகள் ஆா். ராஜேந்திரன், எஸ். முருகேசன், ஜெயபால், ராமன், சாத்தையா, அன்பரசு, யூசுப்சுலைமான், உபயத்ரகுமான், கண்ணாத்தாள், ஜெயலட்சுமி, மாரியம்மாள், நாகஜோதி, சுமதி, லிங்கம்மாள், சோமசுந்தரி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 63 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.